கிராமத்து அரட்டை அரசியல் ---4
"சட்டக் கல்லூரியிலெல்லாம் படிக்கிற பசங்க நல்லா பிராக்டிகல் பண்ணுறாங்கப்பா.... நம்ம கல்வித்தரம் நல்லா முன்னேறியிருக்கு " என்றபடி மூக்கையண்ணன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் மலையாண்டி
"என்னது சட்டக் கல்லூரியில ப்ராக்டிகலா? என்னய்யா சொல்லுற ? எதப் பேசுனாலும் புரியாத படிக்கு உங்க கட்சி கொள்கை மாதிரியே பேசுனா என்ன அர்த்தம்..புரியும் படி சொல்லு" என்றான் அருகிலிருந்த மணி
"கொள்கையப் பத்தி...நீங்க பேசுறீங்க...இருக்கட்டும்...இருக்கட்டும் "என்றான் மலையாண்டி
"அட..விஷயத்தை சொல்லுப்பா...கொள்கை விளக்கம் அப்புறம் வச்சுக்கங்க " என்றார் மூக்கையண்ணன்.
"அண்ணே ...போன வாரம் சென்னை பாரிமுனையில் அம்பேத்கர் சட்டக் கல்லூரில முதலாண்டுல சேர்ந்த மாணவர்களை வரவேற்கும் விழா வியாழக்கிழமை ராஜா அண்ணாமலை மன்றத்துல நடந்துச்சாம். அந்த விழாவில் மூன்றாம் ஆண்டு படிக்குற பசங்க சக மாணவிகளை ரவுசு விட்டதுக்காக , நாலாம் ஆண்டு படிக்கிற கணேஷ்பாபு , கிண்டல் செய்த பசங்களை தட்டிக் கேட்டாராம். இதனால, ரெண்டு பார்ட்டிக்கும் கடும் வாக்குவாதம் வந்து டென்சனாயிருச்சாம்.
இதுக்கெடையில, சனிக்கெழமை சாயங்காலம் வகுப்பறைல இருந்த கணேஷ்பாபுவை மூன்றாம் வருசம் படிக்கும் பூபதி உட்பட 39 பேர் கையில் கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியிருக்காங்க. இதுல, பலத்த காயமடைந்த கணேஷ்பாபுவ கவர்மெண்டு ஆஸ்பத்திரில சேத்துருக்காம் அங்க இருக்குற டாக்டருக்கு படிக்கிறவங்கள்லாம் அவர் ஒடம்புல டிஞ்சர் போட்டு பஞ்சர் ஒட்டி பிராக்டிகல் பண்ணிப் பாக்குறதுக்காக.
இதுக்கு நடுவுல சட்டக் கல்லூரி முதல்வர் ஜெயமணி எஸ்பிளேனடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துருக்காரு. இப்புகாரின் பேரில் கல்லூரியில் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு வன்முறையில் ஈடுபட்ட 39 மாணவர்கள் மீது 147, 148, 448, 324, 506(2) உள்ளிட்ட பிரிவுகள்ள வழக்குப் பதிவு செய்து,மாணவர்களை போலீஸ் தேடிக்கிட்டு இருக்காம்.""
""பாருங்கண்ணே சட்டக்கல்லூரில படிக்கிறப்பவே எவ்வளவு பொறுப்பா பிராக்டிகல் பரிட்சையெல்லாம் செய்யுறாங்க.இப்ப இந்த பசங்களுக்கெல்லாம் 147, 148, 448, 324, 506(2) எல்லா செக்ஸனும் தரோவா ஆயிருமில்லண்ணே...பாருங்க நம்ம பசங்கள்லாம் படிக்கும் போதே என்ன சுறுசுறுப்பா தொழில் கத்துக்குறாங்க"""" என்றான் மலையாண்டி அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு.
"ம்ம்...நக்கலு...ஏண்டா மூணாம் கிளாசு தாண்டாத நீயி பட்டணத்துல படிக்கிறவன பாத்து நக்கல் வுடுறியா.... நேரம்டா " என்றார் மூக்கையண்னன்.
மூணாம் கிளாசு என்று நக்கலடித்ததில் கடுப்பான மலையாண்டி " ஏண்ணே,,ஒரு வேளை இப்படி இருக்குமோ?? உங்க கட்சில சேர்ந்து கார்ப்பரேசன் சட்டசபை எலெக்சனுலல்லாம் ஓட்டு சேகரிக்க இப்பலேருந்தே அடிப்படை உறுப்பினர் தகுதிய வளத்துக்குறாங்களோ என்னமோ " என்றான்.
"டேய்...யாரச் சொன்ன ...போன கார்ப்பரேசன் எலக்சன்ல அராஜகத்தை ஆரம்பிச்சு வச்சது ஒங்க கட்சி ..அதுக்குத்தான் இப்ப நாங்க கொஞ்சம் பதில் மரியாதை செஞ்சோம்... எங்க தன்மானத் தலைவரே சொல்லிட்டருல்ல..போடா பெருசா பேச வந்துட்டான்" என்றார் மூக்கையண்ணன் .
" அப்ப நாங்க செய்யுறதப் பாத்துதான் காப்பியடிப்பீங்க...உங்களுக்குன்னு சுயமா புத்தி கிடையாதா? " என்றான் மலையாண்டி
"டேய், யாரப்பாத்து புத்தி கிடையாதான்னு கேட்ட " என்று மூக்கையண்ணன் மலையாண்டியை அடிக்க ஓடி வர மணி இடையில் புகுந்து தடுக்கப் போக அந்த இடமே பன்றி நோண்டிப் போட்ட கப்பக்கிழங்கு காடு போல களேபரமானது.
12 மறுமொழிகள்:
:)))
என்ன சார்... இவ்வளவு பத்தி பிரிச்சு, போதிய இடைவெளி விட்டு எழுதியிருக்கீங்க : )
மேட்டர் சூப்பர்!
---உங்களுக்குன்னு சுயமா புத்தி கிடையாதா?---
; )) ('அவங்களை நிறுத்த சொல்லு; நான் நிறுத்தேறேன்' மாதிரி சொல்லிட வேண்டியதுதான் : )
என்னங்க..வருங்கால தூண்கள் வருங்கால மந்திரிகளாக பயிற்ச்சி எடுக்கறாங்க. அதை கிராமத்துக்காரங்க இப்படி கிண்டல் பண்றாங்க?:-)))
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
பாலாஜி சார்,
பாராக்ராப் & லைன் ஸ்பேஸிங் (பத்திகள்) சரியாக இல்லை...படிக்க கஷ்டமா இருக்கு...திருத்திப் பதிப்பிக்கவும்
பதிவு நல்லா இருக்கு :))
Boston Sir,
//மேட்டர் சூப்பர்!
//
Thanks !
//'அவங்களை நிறுத்த சொல்லு; நான் நிறுத்தேறேன்' மாதிரி சொல்லிட வேண்டியதுதான் : )
//
"Naayakan" Style :)
Selvan,
Thanks for finding time to visit my blog ;-)
Wish you too a very happy Deepavali
Anony2,
//பாராக்ராப் & லைன் ஸ்பேஸிங் (பத்திகள்) சரியாக இல்லை...படிக்க கஷ்டமா இருக்கு...திருத்திப் பதிப்பிக்கவும்
//
Now it should be OK, Thanks !
Anony1, Anony3,
Thanks for smiling :)))
பாலா,
அதேநாளில் வந்திருந்த இன்னொரு செய்தியைப் பாருங்கள்.
""""சென்னை தியாகராயா கல்லுõரியில் பி.காம்., இரண் டாம் ஆண்டு படித்து வருபவர் பிரேம்குமார் (19). இவர் நேற்று முன்தினம் கல்லுõரியில் இருந்தபோது, அதே கல்லுõரியில் பயிலும் சுரேஷ் உள்ளிட்ட ஐந்து பேர் பிரேம் குமாரிடம் தகராறு செய்தனர். உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் பிரேம்குமார் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கல்லுõரி மாணவர் தேர்தல் நடந்தது. அப்போது ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக தாக்குதல் நடந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சுரேஷ் உள் ளிட்ட ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்."""""
மாணவர்கள் இளரத்தம், பயமரியாதவர்கள் எல்லாம் இருந்தாலும் இது போல உருட்டுக்கட்டை மற்றும் வன்முறை கலாசாரம் கவலை அளிப்பதாக உள்ளது...இதப் பற்றி வலையில் ஒரு விவாதம் கூட நடத்தலாம்...இந்த சீரழிவுக்கு யார் காரணம் பெற்றோர்களா,நண்பர்களா,சமூக சூழ்நிலையா அரசியல் வாதிகளா அல்லது அரசியலா என்று....:)
Saravanakumar, CT,
Thanks for the visit !!!
இந்த நிலைக்கு காரணம், மாணவர்களை சின்ன வயதிலிருந்தே 'பக்குவப்படுத்திவரும்' சினிமாவில் காட்டப்படும் வன்முறைதான்.
கத்தியால் வெட்டுவதும், குண்டு கட்டையால் அடிப்பதும் பார்த்தால் ஓரளவுக்கு பக்குவப்பட்ட நாமே அடுத்த ஒரு மணி நேரத்திர்க்காவது வீரம் கொப்பளித்து வந்து யாரையாவது போட்டு தாக்கலாமே என்று தான் இருப்போம்.
பாவம் மாணவர்கள், பிஞ்சுலேயே பழுக்கிறார்கள் இப்பொழுதெல்லாம்.
பழுக்க வைப்பது நாம் தான்!!
Bad News India,
//பாவம் மாணவர்கள், பிஞ்சுலேயே பழுக்கிறார்கள் இப்பொழுதெல்லாம்.
பழுக்க வைப்பது நாம் தான்!!
//
One is forced to accept (to a large extent), what you say ! Thanks for your visit.
Post a Comment